spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகாகவி பாரதியின் பிறந்தநாளை கவிதையின் பிறந்தநாளாக கொண்டாடுவோம்..... நடிகர் கமல்ஹாசன்!

மகாகவி பாரதியின் பிறந்தநாளை கவிதையின் பிறந்தநாளாக கொண்டாடுவோம்….. நடிகர் கமல்ஹாசன்!

-

- Advertisement -

மகாகவி பாரதியின் பிறந்தநாளை கவிதையின் பிறந்தநாளாக கொண்டாடுவோம்..... நடிகர் கமல்ஹாசன்!தமிழ் கவிதைகளிலும் உரைநடைகளிலும் புலமை மிக்கவர் பாரதியார். இவர் பாஞ்சாலி பாட்டு, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு போன்ற எண்ணற்ற படைப்புகளை படைத்துள்ளார். மகாகவி, தேசிய கவி, புதுக்கவிதை புலவன் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர். தனது கவிதைகளின் மூலம் வீரத்தை விதைத்தவர். முதன் முதலில் பத்திரிகைகளில் தமிழை பயன்படுத்தியவர் இவர்தான். அதேசமயம் தமிழில் கார்ட்டூன் படங்களை அறிமுகப்படுத்திய பெருமை இவரையே சேரும். இத்தகைய பெருமைக்குரிய சுப்பிரமணிய பாரதி அவர்களின் 141வது பிறந்த நாள் இன்று. இந்த தினத்தில் பாரதியின் பிறந்த நாளை கவிதையின் பிறந்த நாளாக கொண்டாடுவோம் என நடிகர் கமல்ஹாசனும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், ” சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மகாகவி பாரதியின் பிறந்தநாளை கவிதையின் பிறந்தநாளாக கொண்டாடுவோம்..... நடிகர் கமல்ஹாசன்!

we-r-hiring

மேலும் நடிகர் கமல்ஹாசன் பாரதியாரின் மீது அதிக பற்று கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ