spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசைலன்டாக சம்பவம்செய்யும் ஷாருக்கானின் 'டங்கி'... பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!

சைலன்டாக சம்பவம்செய்யும் ஷாருக்கானின் ‘டங்கி’… பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!

-

- Advertisement -

சைலன்டாக சம்பவம்செய்யும் ஷாருக்கானின் 'டங்கி'... பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்!இந்திய அளவில் முக்கியமான இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி. இவர் இயக்கத்தில் வெளிவந்த 3 இடியட்ஸ், பி.கே, முன்னாபாய் எம்.பி.பி.எஸ், சஞ்சு போன்ற படங்கள் வசூலில் மிரட்டியிருந்தன. இப்படங்கள் பல இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. இந்த நிலையில் இவர் ஷாருக்கானுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்ற அறிவிப்பு வந்த உடனேயே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் வேற லெவலில் இருந்தது. அதன்படி “டங்கி” திரைப்படம் கடந்த டிசம்பர் 21 அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் தான் வந்துள்ளது. ராஜ்குமார் ஹிராணியின் வழக்கமான படங்கள் போலவே இப்படத்திலும் ஒரு சோசியல் மெசேஜை என்டர்டெயின்மெண்ட் உடன் கலந்து கூறியிருந்தார். வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞர்கள் சட்ட விரோதமாக லண்டனைச் சென்றடைந்து பின்னர் அங்கிருந்து எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதே படத்தின் அடிப்படைக்கதை. நகைச்சுவை எமோஷனல் என, சொல்ல வந்த கருத்தை போரடிக்காமல் கூறியிருந்தார் ராஜ்குமார் ஹிராணி. மேலும் ஷாருக் கான் இந்த ஆண்டில் மட்டும் ஜவான், பதான் என அடுத்தடுத்து இரண்டு 1000 கோடி படங்களைக் கொடுத்து மாபெரும் உச்சத்தில் உள்ளார். இவ்விரண்டு படங்களும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் பான் இந்தியத் திரைப்படங்களாக வெளியாகின.சைலன்டாக சம்பவம்செய்யும் ஷாருக்கானின் "டங்கி"... பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்! ஆனால் டங்கி திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகியும் கூட வசூலில் 305 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நல்ல கன்டென்ட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே இதைக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். மேலும் படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் அடுத்து வரும் நாட்களிலும் நல்ல வசூலை எட்டும் என நம்பப்படுகிறது. ஆயிரம் கோடியை வசூலிப்பது சற்று கடினம் என்றாலும் கூட இப்படம் நிச்சயமாக ஒரு மாபெரும் வசூலை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ