- Advertisement -
இந்த 2023-ம் ஆண்டு இன்றுடன் முடிய உள்ள நிலையில், இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த நாயகர்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இது இந்திய அளவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சினிமா உலகில் இவ்வாண்டு பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள படங்களில் சுமார் 2,500 கோடி ரூபாயை ஒரே வருடத்தில் வசூல் செய்து இந்த 2023 ஆம் ஆண்டின் வெற்றி நாயகனாக மாறி இருக்கிறார் பாலிவுட்டின் கிங்கான் ஷாருக்கான். இந்த ஆண்டு அவரது நடிப்பில் பதான், அட்லீயின் ஜவான் மற்றும் டன்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
