spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைநடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் – கார்த்தி!

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் – கார்த்தி!

-

- Advertisement -

ஜனவரி 19ஆம் தேதி நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் நடைபெரும் என நடிகரும், நடிகர் சங்க பொருளாளருமான கார்த்தி தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் – கார்த்தி!

we-r-hiring

சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் கார்த்தி மற்றும் சிவகுமார் வந்திருந்தனர். கேப்டன் நினைவிடத்தை பார்த்து மனம் உருகிய இருவரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி கூறியதாவது.

கேப்டன் அவர்கள் மறைந்து விட்டார், நம்முடன் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவருடைய இறப்பிற்கு அஞ்சலி செலுத்தவில்லை என்பது வாழ்நாள் துயரமாக அமைந்துள்ளது.

நடிகர் சங்கம் சார்பில் கேப்டன் விஜயகாந்திற்கு இரங்கல் கூட்டம் – கார்த்தி!

கேப்டன் அவர்களுடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. நான் சிறிய வயதாக இருக்கும் போது தி.நகரில் இருக்கும்போது அவர் இருக்கும் இடங்களில் எப்போதும் சாப்பாடு போட்டுக் கொண்டே இருப்பார், அதை யார் வேணாலும் போய் சாப்பிடலாம் அப்படின்றத சொல்லுவாங்க. அதேபோல் அவருடைய படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் போலீஸ் வேடம் நடிக்க வேண்டும் என்றால் தவறாமல் அவருடைய படங்கள் பத்து முறை பார்ப்பதுண்டு.

நடிகர் சங்கம் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு அவரை சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது, அப்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். நடிகர் சங்கத்தில் மிகப்பெரிய சவால்கள் வரும்போது எல்லாம் நாங்கள் அனைவரும் நினைத்துக் கொள்ளக்கூடிய ஒரு மனிதனாக கேப்டன் இருந்தார். ஏனென்றால் அனைவரையும் வழிநடத்துவது களத்தில் இறங்கி வேலை பார்ப்பதே என திறன்பட செயல்பட்டார்.Mourning Meeting

வருகிற 19ஆம் தேதி நடிகர சங்கம் சார்பில் கேப்டன் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளோம் அது மட்டும் இல்லாமல் அவர் நினைவு நிலைக்கும் படி நாங்கள் செய்யக்கூடிய விஷயமாக இருக்கட்டும், அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கையாக இருக்கட்டும் அது அனைத்தும் அன்று பேசுவோம்.

கேப்டன் அன்பை அனைவருக்கும் வாரி வழங்கினார். அவர் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர்களுடைய தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

MUST READ