
பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை ரத்துச் செய்துள்ளனர்.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!
பிரதமர் நரேந்திரமோடி அண்மையில் லட்சத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள கடற்கரையில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. ஆழ்க்கடல் நீச்சலுக்கான உடையில் பிரதமர் நரேந்திர மோடி இருந்த புகைப்படம் கவனம் பெற்றது.
மாலத்தீவுக்கு மாற்றாக சிறந்த சுற்றுலாத்தலமாக லட்சத்தீவுகளைப் பரிந்துரைப்பது போல், பிரதமரின் புகைப்படங்கள் அமைந்தன. இந்த நிலையில், மாலத்தீவுகளைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதற்கு இந்திய அரசு தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த அமைச்சர்கள் மரியம் சியோனா, மெல்ஷா ஷெரீப் மற்றும் அப்துல்லா ஆகியோரை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்தது. தரக்குறைவான கருத்துகளை கூறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், மாலத்தீவுகளுக்கு இந்திய தரப்பில் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றனர்.
யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அந்நாட்டு சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த இந்தியர்கள் பலர் தங்கள் பயணத்தை ரத்துச் செய்துள்ளனர். இந்தியா மாலத்தீவுகளுக்கு இடையேயான விமான பயணத்திற்கான முன்பதிவுகளை ‘Ease My Trip’ நிறுவனம் தற்காலிகமாக ரத்துச் செய்துள்ளது.
மாலத்தீவு அமைச்சர்களுக்கு இந்திய பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.