
சென்னை உட்பட 29 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
யோகி பாபு நடிக்கும் ‘தூக்குதுரை’….. ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்டா மாவட்டங்களில் மழை தொடரும்; சென்னை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 29 மாவட்டங்களில் இன்று (ஜன.08) காலை 10.00 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் ஏற்கனவே மழை பெய்து வரும் நிலையில் மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினி…. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்கள்!
இதனிடையே, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (ஜன.08) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.