spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகடைசி ஷாட் முடிஞ்சது..... கங்குவா படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

கடைசி ஷாட் முடிஞ்சது….. கங்குவா படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

-

- Advertisement -

கடைசி ஷாட் முடிஞ்சது..... கங்குவா படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!நடிகர் சூர்யா தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். 3D அனிமேஷன் தொழில்நுட்பத்தில் மிகப் பிரமாண்டமான பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. அதேசமயம் 2024 ஏப்ரல் மாதத்தில் பத்து மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல், ராஜமுந்திரி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த காடுகளில் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதற்கிடையில் நடிகர் சூர்யாவிற்கு கங்குவாபடப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டு  சில நாட்கள் ஓய்வில் இருந்தார்.

we-r-hiring

இந்நிலையில் கங்குவா படப்பிடிப்பு முழுவதையும் முடித்து விட்ட சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் பட குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “கங்குவா படத்தின் கடைசி ஷாட்டை முடித்து விட்டேன். முழு படமும் நேர்மறையான எண்ணங்களை தருகிறது. இயக்குனர் சிவா மற்றும் படக்குழுவுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கங்குவா எனக்கு மிகப்பெரிய ஸ்பெஷலான படம். உங்களை திரையில் சந்திப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கங்குவா பட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.

MUST READ