- Advertisement -
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மெரி கிறிஸ்துமஸ் படம் பார்த்த இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் பாராட்டி இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். தனுஷிற்கு பிறகு பாலிவுட்டில் கால் பதித்த இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் உடன் இவர் நடித்து வரும் ஜவான் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்திருப்பார்,


இதற்கிடையே விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய இந்தி திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து ராதிகா சரத்குமார், டினு ஆனந்த், ராதிகா ஆப்தே, சஞ்சய் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் இத்திரைப்படம் உருவாகி உள்ளது. ஸ்ரீராம் ராகவன் படத்தை இயக்கி இருக்கிறார்.



