spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி காலமானார்!

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி காலமானார்!

-

- Advertisement -

பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி காலமானார்!பிரபல இந்துஸ்தானி பாடகி பிரபா ஆத்ரே காலமானார்.

பிரபா ஆத்ரே, இந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்றவர். கிரானா கரானா எனும் இசைப் பள்ளியைச் சேர்ந்த பிரபா ஆத்ரே 92 வயதுடையவர். இவர் மூன்று முறை இந்திய அரசின் உயரிய விருது பத்ம விருதுகளை வென்றிருக்கிறார். கடந்த 1932 ல் பிறந்தவர் பிரபா ஆத்ரே. இவர் இசைமீது உள்ள மிகுந்த ஆர்வத்தினால் இசைத்துறைக்குள் நுழைந்தவர். இவர் இசைத்துறையில் சர்கம் என்ற ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் இசைத்துறையில் மட்டுமல்லாமல் அறிவியல், சட்டம் ஆகியவற்றிலும் பட்டம் பெற்றுள்ளார்.

we-r-hiring

கடந்த 1990 இல் பத்மஸ்ரீ விருதையும், கடந்த 2002 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் கடந்த 2022 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் வென்றுள்ளார். மேலும் புனே பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது, சங்கீத அகாடமி விருது போன்ற பல விருதுகளையும் வென்றுள்ளார்.பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி காலமானார்!இத்தகைய புகழ்பெற்ற டாக்டர். பிரபா ஆத்ரே புனேவில் உள்ள அவரது வீட்டில் உறக்கத்தின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபா ஆத்ரே நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு பலரும் தங்களின் இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ