Homeசெய்திகள்சினிமாகே.ஜி.எஃப்-1, காந்தாரா படங்களை மிஞ்சிய 'ஹனுமான்' ......உலக அளவில் பிரமாண்ட வெற்றி!

கே.ஜி.எஃப்-1, காந்தாரா படங்களை மிஞ்சிய ‘ஹனுமான்’ ……உலக அளவில் பிரமாண்ட வெற்றி!

-

- Advertisement -

கே.ஜி.எஃப்-1, காந்தாரா படங்களை மிஞ்சிய 'ஹனுமான்' ......உலக அளவில் பிரமாண்ட வெற்றி!தெலுங்கு திரை உலகில் இந்த வருடத்தின் சங்கராந்தி ஸ்பெஷல் ஆக வெளியாகியுள்ள சூப்பர் ஹீரோ திரைப்படம் ஹனுமான். தேஜா சஜா ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் சாதாரண மனிதன் திடீரென சூப்பர் பவர் கிடைத்து தீய சக்திகளுக்கு எதிராக போராடுவதே கதைக்களம். படத்தின் பாசிட்டிவாக வி.எஃப்.எக்ஸ் காட்சிகளைக் கூறலாம். நடிகர்களுக்கென பெரிதளவு பட்ஜெட் ஒதுக்காமல் தொழில்நுட்பத்திற்காக செலவு செய்யப்பட்டிருப்பதால் படத்தின் தரத்தில் சமரசம் இல்லாமல் வெளியாகியுள்ளது. குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசித்துப் பார்க்கும் படியாக இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் இந்திய அளவில் 4 நாட்களில் 50 கோடிகளைத் தாண்டி வசூலித்துள்ளது.

இது கே.ஜி.எஃப்.சாப்டர் 1, காந்தாரா போன்ற படங்களில் முதல் வார வசூலை விட அதிகமாகும். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்திருப்பதும் தொடர் விடுமுறை காரணமாகவும் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் அதிகரித்துள்ளது. பான் இந்திய திரைப்படமாக வெளியாகி உள்ள ஹனுமான் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு டப்பிங் பக்காவாக பொருந்தி உள்ளதால் ரிலீஸான அனைத்து மாநிலங்களிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மேலும் ஹனுமான் படத்தை தமிழகத்தில் வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரம்மாண்ட வெற்றியை வீடியோ மூலம் அறிவித்துள்ளது.

MUST READ