- Advertisement -
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஆர்ஜே பாலாஜி. வெறும் குரல் வழியாக தமிழகத்தில் பல கோடி மக்களின் மனதை வென்று, பின்னர் திரையில் தோன்றியவர் ஆர்ஜே பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக பணியாற்றிய அவர் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார். இவருடைய ரேடியோ வர்ணனைக்கும், கிரிக்கெட் கமெண்ட்ரிக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நானும் ரவுடிதான், காற்று வௌியிடை, இது என்ன மாயம் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

நடிப்பு மட்டுமன்றி இயக்கத்திலும் அவருக்கு அதீத ஆர்வம் உண்டு. எல்கேஜி படத்தை அவரே இயக்கி நடித்தார். அதில் நாயகனாகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அதே போல, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். அடுத்து ரன் பேபி ரன் மற்றும் இந்தி ரீமேக் படமான வீட்ல விஷேசன் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.


