spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிரதமர் நரேந்திர மோடி வருகை- சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

பிரதமர் நரேந்திர மோடி வருகை- சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

-

- Advertisement -

 

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: PM Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜன.19) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வணிக வாகனங்கள் நாளை மதியம் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

பயணிகளுக்கு ஏற்பட்ட அவலம்- இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

இது தொடர்பாக பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அண்ணா சாலை, சர்தார் பட்டேல் சாலை, ஜி.எஸ்.டி. சாலைகளை வாகன ஓட்டிகள் தவிர்க்க வேண்டும். அண்ணா ஆர்ச் முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனம் செல்ல அனுமதியில்லை. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா ஆர்ச்சில் திரும்பி அண்ணா நகர் வழியாகச் செல்லலாம். வடசென்னையில் இருந்து பாரிமுனை செல்ல ஸ்டான்லி, மூலக்கொத்தளம் வழியாகத் திருப்பி விடப்படும். ஹண்டர்ஸ் சாலையில் இருந்து ஈ.வெ.ரா. சாலையை நோக்கி வணிக வாக்னங்கள் திருப்பி விடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தின் மாற்றம் காரணமாக, பிரதமரின் விழா நடைபெறும் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளில் சிறிதளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஐ.என்.எஸ். அடையாறு- நேரு உள் விளையாட்டு அரங்கம் வரையிலான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்.

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!

இதனிடையே, நாளை (ஜன.18) தமிழகம் வருகை தரவுள்ள பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் கேலோ இந்தியா போட்டியைத் தொடங்கி வைக்கிறார். அதைத் தொடர்ந்து, திருச்சி மற்றும் ராமேஸ்வரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டு வழிபாடு நடத்தவுள்ளார்.

MUST READ