Homeசெய்திகள்இந்தியாபயணிகளுக்கு ஏற்பட்ட அவலம்- இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

பயணிகளுக்கு ஏற்பட்ட அவலம்- இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

-

- Advertisement -

 

பாகிஸ்தான் வான் பரப்புக்குள் சென்ற இண்டிகோ விமானம்!
Photo: Indigo Airlines

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் ஓடுப்பாதையில் அமர்ந்து, விமானப் பயணிகள் உணவருந்திய விமானத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!

பயணிகளை முறையாக கையாளத் தவறியதற்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு 1 கோடியே 20 லட்சம் ரூபாயை மத்திய சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் அபராதமாக விதித்துள்ளது. அதே சமயம், மும்பை விமான நிலையத்திற்கு மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் 90 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக, கோவாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இண்டிகோ பயணிகள் விமானம், மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. மும்பையில் விமானம் தரையிறங்கியதும், விமான பயணிகள் ஓடுப்பாதைக்கு அருகே உள்ள பகுதிகளில் அமர்ந்து உணவருந்தினர். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இண்டிகோ விமான நிறுவனம், மும்பை விமான நிலையம் மீது புகார் எழுந்தன.

பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

இந்த சம்பவம் தொடர்பாக, விளக்கம் அளிக்கும் படி, இண்டிகோ விமான நிறுவனம் மற்றும் மும்பை விமான நிலையத்திற்கு சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அத்துடன், அபராதமும் விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ