spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!

-

- Advertisement -

 

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!

we-r-hiring

சீனாவின் மொத்த மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.

பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனாவில் ஒரு குழந்தை கொள்கையை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியதைத் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, கடந்த ஆறு சதாப்தங்களில் முதன்முறையாக கடந்த 2022- ஆம் ஆண்டு மக்கள்தொகை சரிவடைந்தது. கடந்த 2022- ஆம் ஆண்டு 95 லட்சத்து 60 ஆயிரம் குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளன.

இந்த நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையில் 5.6% குறைந்துள்ளது. கடந்த ஆண்டு அங்கு மொத்தமாக 90 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதன் விளைவாக, சீனாவின் மக்கள் தொகையில் 20 லட்சத்து 8 ஆயிரம் குறைந்துள்ளது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட கொள்கைகளும், 2020 மற்றும் 2022- க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மக்கள்தொகை சரிவடைய ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

2022- ஆம் ஆண்டு 141 கோடியே 18 லட்சம் ஆக இருந்த சீனாவின் மக்கள்தொகை, கடந்த ஆண்டு 140 கோடியே 97 லட்சம் ஆக குறைந்தது. இதைத் தொடர்ந்து, 142 கோடியே 86 லட்சம் என்ற மக்கள்தொகையைக் கொண்ட இந்தியா, உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடானது. 2016- ஆம் ஆண்டு முதல் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 1949- ஆம் ஆண்டு பிறப்பு விகிதம் மிகவும் குறைந்த அளவாக ஒவ்வொரு ஆயிரம் பேருக்கும் 6.39% இருந்தது.

வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

இந்த விகிதம் கடந்த 2022- ஆம் ஆண்டு 6.77% ஆக இருந்தது. கடந்த ஆண்டு ஒரு கோடியே 11 லட்சம் உயிரிழப்புகள் சீனாவாவில் பதிவான நிலையில், சராசரி இறப்பு விகிதம் 1,000 பேரில் 7.87% ஆக உயர்ந்தது. பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதால் வரும் ஆண்டுகளில் மக்கள்தொகை மேலும் குறையக்கூடும் என்று கூறப்படுகிறது.

MUST READ