Homeசெய்திகள்விளையாட்டுவரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

-

- Advertisement -

 

வரலாறு படைத்த டி20 கிரிக்கெட் போட்டி!

இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் ஒரே போட்டியில் நடத்தப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.

ஆரோக்கியமான ஃப்ரூட் ரைஸ் செய்வது எப்படி?

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஓவர் சமமானதால் மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் விளாசியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக டி20 சதங்கள் விளாசிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அவருக்கு இது 5 ஆவது சதமாகும்.

அவசரத்திற்கு உதவும் சில மருத்துவ குறிப்புகள்!

அதேபோல், 20 ஓவரில் அதிக ரன்கள் எடுத்த அணியாக, இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது. 20 ஆவது ஓவரில் 36 ரன்களை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ரிங்கு சேர்ந்து விளாசினர். இத்துடன், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக டக்அவுட் ஆன இந்திய வீரர்கள் பட்டியலில் 34 முறை டக்அவுட் ஆன சச்சினை விராட்கோலி முந்தியுள்ளார். சர்வதேச டி20 முதன்முறையாக அவர் கோல்டன் டக்அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ