Homeசெய்திகள்தமிழ்நாடுLPF, NPDEF சம்மேளனங்களுடன் இணைந்த ஆவடி என்ஜின் தொழிற்சாலை தொழிலாளர் யூனியன்

LPF, NPDEF சம்மேளனங்களுடன் இணைந்த ஆவடி என்ஜின் தொழிற்சாலை தொழிலாளர் யூனியன்

-

- Advertisement -

ஆவடி என்ஜின் தொழிற்சாலை தொழிலாளர் யூனியன் சங்கம், அகில இந்திய பாதுகாப்புத்துறை சம்மேளனங்களான LPF மற்றும் NPDEF சம்மேளனங்களுடன் இணைந்தது.

we-r-hiring

ஆவடியில் இயங்கக்கூடிய மத்திய அரசின் தொழிற்சாலைகளில் ஒன்றான பாதுகாப்புத்துறை தொழிற்சாலையான இன்ஜின் தொழிற்சாலையில் இயங்கி வரும் இன்ஜின் ஃபேக்டரி ஒர்க்கர்ஸ் யூனியன் சங்கமானது அகில இந்திய பாதுகாப்புத்துறை சம்மேளனங்களான LPF மற்றும் NPDEF சம்மேளனங்களுடன் இணைக்கும் நிகழ்ச்சி ஆவடி இஞ்சின் தொழிற்சாலையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சாமு நாசர் கலந்து கொண்டு அகில இந்திய பாதுகாப்பு துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்தற்கான இணைப்பு சான்றிதழ்களை சங்க நிர்வாகிகளிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அவர், தலைவர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து தொழிலாளர்களின் குறைகளை கூறிய போது தலைவர் கலைஞர் தொழிலாளர்களின் ஒற்றுமையை கண்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படுமாயின் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கலைஞர் அவர்கள் தெரிவித்தார் என்பதை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டார்.. முன்னதாக பேசிய NPDEF சம்மேளன பொதுச் செயலாளர் வேலுச்சாமி சிறப்புக்குரிய தலைவர் கலைஞர் அவர்களின் கரங்களால் துவக்கி வைக்கப்பட்டதுதான் இந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் விழா ஏற்பாடு செய்திருந்த எஞ்சின் பேக்டரி தொழிலாளர் யூனியன் நிர்வாகிகள்,மற்றும் தலைவர் சாம்சன், பொதுச் செயலாளர் ஆரோக்கியராஜ், ஆவடி பகுதி கழக செயலாளர்கள் சன் பிரகாஷ், பொன் விஜயன், நாராயண பிரசாத், மற்றும் கழக பொறுப்பாளர்கள், என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ