- Advertisement -
இந்திய திரையுலகம் என கொண்டாடப்படுவது பாலிவுட் திரையுலகம். பாலிவுட்டில் ஏராளமான நடிகைகள் இருந்தாலும், சிலர் மட்டுமே உச்ச நட்சத்திரங்களாக வலம் வருகின்றனர். ஆலியா பட், தீபிகா படுகோன், கிருத்தி சனோன் வரிசையில் முக்கியமான நபர் கத்ரினா கைஃப். ஆங்கிலோ இந்தியனான இவர், ஆரம்பம் முதலே பாலிவுட் திரையுலகில் மட்டும் நடித்து வருகிறார். இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.

தமிழில் அவர் திரைப்படம் நடிக்காவிட்டாலும், அவரது திரைப்படங்கள் தமிழிலும் பிரபலம் அடையும். இறுதியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ஸ்ரீராம் ராகவன் என்பவர் இயக்கி இருந்தார். இதில் ராதிகா, ராதிகா ஆப்தே, காயத்ரி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியானது.




