ரஜினி ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இதைத் தொடர்ந்து ரஜினி தனது 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தவர். இந்நிலையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தலைவர் 171 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக இருந்தது வருகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அனிருத் இதற்கு இசையமைக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்கிடையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஏப்ரல் மாதத்தில் தொடங்க இருப்பதாகவும், இப்படம் மாஸான ஆக்சன் படமாக உருவாக இருப்பதாகவும் அப்டேட் கொடுத்திருந்தார். இந்நிலையில் இதன் கூடுதல் தகவலாக, இந்த படத்தில் ரஜினியை இளமையான தோற்றத்தில் காண்பிக்க டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது. மேலும் இது சம்பந்தமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜய்யின் GOAT படத்திலும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.