Homeசெய்திகள்சினிமாவைபவ் நடிக்கும் 'ரணம்' படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

வைபவ் நடிக்கும் ‘ரணம்’ படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

வைபவ் நடிக்கும் 'ரணம்' படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு!பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, சென்னை 600028, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் வைபவ். இவர் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். அதே சமயம் கப்பல், மேயாத மான், லாக்கப் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார் வைபவ். அந்த வகையில் வைபவ் நடிப்பில் உருவான ஆலம்பனா திரைப்படம் ரிலீஸாகும் கடைசி நேரத்தில் ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. விரைவில் இதன் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அடுத்தடுத்த வைபவ், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் என்ற புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் வைபவ், இயக்குனர் ஷெரீஃப் இயக்கத்தில் ரணம் எனும் படத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை மிதுன் மித்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  அரோல் கொரேல்லி இதற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் வைபவ், தான்யா ஹோப், நந்திதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பாக வெளியான நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வைபவ் நடிக்கும் 'ரணம்' படத்தின் அடுத்த பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு! இதற்கிடையில் படத்தில் இடம்பெற்றுள்ள முதல் இரண்டு பாடல்கள் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக படத்தின் பொல்லாத குருவி எனும் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த பாடலை நடிகர் அசோக் செல்வன் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ