ஜிவி பிரகாஷ், வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதேசமயம் பல பாடல்களை பாடியும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட 25 படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார் ஜிவி பிரகாஷ். இவர் நடித்துள்ள பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் நீதிபதியாக தேர்வாகியுள்ள ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ஜி.வி பிரகாஷ்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புலியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஶ்ரீபதி. 22 வயதுடைய ஸ்ரீபதிக்கு திருமணமாகி குழந்தை இருக்கிறது. இவர் டி என் பி எஸ் சி சிவில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்று நீதிபதியாக தேர்வாகியுள்ளார்.
எனவே ஸ்ரீபதிக்கு அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை – திருவள்ளுவர்
👏👏👏👏👏👏👏👏 pic.twitter.com/VQokp7S7bJ— G.V.Prakash Kumar (@gvprakash) February 13, 2024
அந்த பதிவில், “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்று திருவள்ளுவரின் திருக்குறளை குறிப்பிட்டு ஶ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.