- Advertisement -
ஜி.வி.பிரகாஷ் மற்றும் இவானா நடித்துள்ள கள்வன் படத்திலிருந்து புதிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்து புகழ் பெற்றவர் ஜி.வி.பிரகாஷ். இசை மட்டுமன்றி நடிப்பிலும் ஆர்வம் செலுத்தி வரும் ஜி.விபிரகாஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான பேச்சுலர், ஜெயில் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் என்ற படத்தில் நடித்துள்ளார். ம் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
