- Advertisement -
பாலிவுட்டின் பிரபல பாடல் ஆசிரியரான குல்சாருக்கு, ஞானபீட விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய திரையுலகம் என்று கொண்டாடப்படும் பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடல் ஆசிரியராக விளங்குபவர் குல்சார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி இருக்கிறார். உருது கவிஞரான இவர் இந்தியிலும் பல படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி இருக்கிறார். 1963-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பண்டின. இப்படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றிய பர்மன், குல்சாரை பாடல் ஆசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு அவர் வரிகள் எழுதி உள்ளார். சினிமா மட்டுமன்றி ஏராளமான புத்தகங்களையும் அவர் எழுதி உள்ளார்.


சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை 5 முறை வென்றுள்ளார். இது மட்டுமன்றி பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் குல்சார் வென்றுள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதும் குல்சாருக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. சிறந்த புத்தகங்களை எழுதியதற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருதும் வழங்கப்பட்டு இருக்கிறது.



