- Advertisement -
நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்த விஜய்யின் கவனம் தற்போது, அரசியல் பக்கம் திரும்பி இருக்கிறது. நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கோட் என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. படத்தில் விஜய்யுடன் இணைந்து, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, பிரேம்ஜி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இது தவிர மோகன் உள்பட பலரும் படத்தில் இணைந்திருக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, இத்தாலி மற்றும் சென்னையில் மாறி மாறி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அண்மையில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில், அண்மையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் கட்சி தொடங்கியதை தொடர்ந்து அடுத்தடுத்து பல களப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆலோசனை கூட்டமும் அண்மையில் பனையூரில் நடைபெற்றது.




