spot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்அச்சிறுப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைப்பு

அச்சிறுப்பாக்கத்தில் 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைப்பு

-

- Advertisement -

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் 19 வணிகக் கடைகாரர்கள் வாடகை செலுத்தாததால் அந்த கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் பேரூராட்சிகுட்பட்ட தாமரை குளக்கரை சுற்றி பேரூராட்சிக்கு சொந்தமாக 33 கடைகள் உள்ளது.

we-r-hiring

அந்த 33 கடைகளில் அரிசி கடை, குளிர்பான கடை, மெக்கானிக் கடை, சலூன் என 19 கடைகாரர்கள் இந்நாள் வரை வாடகை செலுத்த வில்லை.

பேரூராட்சி அதிகாரிகள் பல முறை எச்சரித்தும், நோட்டிஸ் வழங்கியும் உள்ளனர்.

ஆனால், தற்போது வரை வாடகை பாக்கி தராத கடைகளுக்கு இன்று பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைப்படி பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் உத்தரவுப்படி வாடகை செலுத்தாத 19 கடைகளுக்கு பேரூராட்சி பணியாளர்கள் சீல் வைத்தனர்.

MUST READ