Homeசெய்திகள்மாவட்டம்"முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!" - சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும்...

“முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!” – சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!

-

- Advertisement -

சேலம் மாவட்டத்தில் எவ்வித முன்னறிவிப்புமின்றித் தனியார் நகரப் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது."முன்னறிவிப்பின்றி தனியார் நகரப் பேருந்து கட்டணம் உயர்வு!" - சேலத்தில் பொதுமக்கள், சமூக அமைப்புகள் கடும் அதிர்ச்சியும் கண்டனமும்!

ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடி உயர்வு – சேலத்தில் இருந்து இயங்கக்கூடிய சுமார் 50 கி.மீ. தொலைவு வரையிலான எல்லைகளைக் கொண்ட தனியார் நகரப் பேருந்துகளில், பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன்படி பயணக் கட்டணம் ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சேலத்தில் இருந்து அருகில் உள்ள பிற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தினசரிப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

we-r-hiring

காய்கறி கூடைகளுக்கும் கூடுதல் கட்டணம் வசூல்! கட்டண உயர்வு மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்து சேலம் நகருக்குத் தனியார் பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கறி கூடைகளுக்கும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பொதுமக்கள் & சமூக அமைப்புகள் கண்டனம்
அரசின் அனுமதி பெறாமலும், பொதுமக்களுக்கு எந்தவிதமான முன் அறிவிப்பும் வழங்காமலும் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் தன்னிச்சையான கட்டண உயர்வுக்குப் பல்வேறு அமைப்புகளும், பயணிகளும் தங்களது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உடனடியாகத் தலையிட்டு, இந்தத் சட்டவிரோதக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எடப்பாடி அருகே பொன்னம்பாளையத்தில் பரபரப்பு: குடிநீர் கோரி கால்நடைகளுடன் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த விவசாயிகள்!

MUST READ