spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவு... திரையுலகினர் இரங்கல்...

பிரபல பாடகர் பங்கஜ் உதாஸ் மறைவு… திரையுலகினர் இரங்கல்…

-

- Advertisement -
பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பின்னணி பாடகர் பங்கஜ் உதாஸ் இன்று மறைந்தார். இதனால், திரையுலகமே ஆதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அவருக்கு வயது 72.

குஜராத் மாநிலத்தில் ஜமீன்தார் குடும்பத்தைச் சேந்தவர் பாடகர் பங்கஜ் உதாஸ். இவரது தாயார் பாட்டை விரும்பி பாட, அதனால், இவருக்கும் இவரது அண்ணனுக்கும் இசை மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறுவயதில் லதா மங்கேஷ்கர் வௌியிட்ட இ மேரே வதன் என்ற பாடல் உதாஸூக்கு பிடித்துப்போக அந்த பாடலை அதே தாளத்துடன் பாடி அனைவரையும் அசத்தி இருர்கிறார். இதே பாடலை பள்ளியிலும் அனைத்து மாணவர்கள் முன்பாக பாடி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார் பங்கஜ்.

we-r-hiring
இதைத் தொடர்ந்து ராஜ்கோட்டில் உள்ள மியூசிக் அகாடமியில் சேரந்து படித்து முடித்தார். படிப்பை முடித்த பங்கஸ் பாலிவுட் திரையில் அறிமுகமாகி பல பாடல்களை பாடி இருக்கிறார். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில், வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், இன்று பங்கஜ் உதாஸ் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது குறித்து வெளியிட்டப்பட்ட பதிவில், பங்கஜ் நீண்ட காலமாக உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும், பிப்ரவரி 26-ம் தேதி காலமானார் எனவும் தெரிவித்திருந்தனர். பங்கஜின் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ