spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபள்ளி மாணவர்கள் கஞ்சா கடத்தியதாக வெளியான செய்தி - தமிழக காவல்துறை மறுப்பு

பள்ளி மாணவர்கள் கஞ்சா கடத்தியதாக வெளியான செய்தி – தமிழக காவல்துறை மறுப்பு

-

- Advertisement -

 

we-r-hiring

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்கள் 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததாக தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், தமிழக காவல்துறை இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், கடந்த 29.02.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உட்கோட்டம், எலவனாசூர்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 6 பாக்கெட் (சுமார் 150 கிராம் கஞ்சா மதிப்பு 1500/- ரூபாய் ) கைப்பற்றப்பட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அல்ல.

இதுதொடர்பான செய்தியை திரித்து உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவர்கள் நான்கு பேரை காவல்துறையினர் துரத்தி பிடித்து அவர்களிடமிருந்து 2,00,000/- ரூபாய் மதிப்புடைய 500 பாக்கெட் கஞ்சா பொட்டலங்களுடன் சிக்கியதாகவும் அதை இனிப்போடு கலந்து சக மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்டதாகவும் சமூக வலைதளம் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளில் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் மிகைப்படுத்தப்பட்டு பொய்ச்செய்தி பரவி வருகிறது. இது சம்மந்தமாக பாலிமர் டிவி செய்தி தொலைக்காட்சி மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களில் உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பி வருகின்றனர் இச்செய்தியை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ