
புதுச்சேரியில் காணாமல் போன ஒன்பது வயது சிறுமியை காவல்துறையினர் வீடு வீடாகச் சென்று தேடி வருகின்றனர்.

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே
புதுச்சேரி மாநிலம், சோலைநகர் பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி தம்பதியின் இரண்டாவது மகள் ஆர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார்.நன்கொடை பெறுவதற்காக வந்த மயானக் கொள்ளை நிகழ்ச்சி குழுவினரின் பின்னால் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், சிறுமியைக் காணாததால், அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர், சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு சென்று அங்கு பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமி தனியாகவே நடந்து சென்றதாகவும், சோலைநகர் பகுதியில் அவர் கடத்தப்படவில்லை என்பதையும் கண்டறிந்தனர்.
மது கேட்டு வாக்குவாதம் – இருவர் கைது
இந்த நிலையில், காணாமல் போன சிறுமியை அப்பகுதியில் உள்ள வீடுகளில் காவல்துறையினர் தேடி வருகின்றனர். குழந்தைக் கடத்தப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணையானது நடைபெற்று வருகிறது.


