Homeசெய்திகள்சென்னைசென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது - தெற்கு ரயில்வே

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது – தெற்கு ரயில்வே

-

- Advertisement -

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில் பிப்ரவரி 2 வரை புறநகர் ரயில்கள் நின்று செல்லாது

சென்னை பேசின் பாலம் ரயில் நிலையத்தில்  புறநகர் ரயில்கள் நிற்காது -தெற்கு ரயில்வே-

we-r-hiring

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம்  மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கம் புறநகர் ரயில் சேவை இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு முன்னதாக அமைந்துள்ள பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அவ்வழியே ரயில் பயணம் மேற்கொண்டு வரும் ரயில் பயணிகள் மாற்று பாதை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை தெற்கு ரயில்வே கேட்டு கொண்டுள்ளது.

பேசின் பாலம் ரயில் நிலையத்தில் புறநகர் ரயில்கள் நிற்காது என்பதால் கொருக்குப்பேட்டை – சென்னை சென்ட்ரல் மார்க்கம் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது அதற்கு பதிலாக சென்னை கடற்கரை மார்க்கம் புறநகர் ரயில்கள் செல்லும் என தெரிவித்துள்ளது.

கொருக்குப்பேட்டை சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இயங்காது.

இப்பராமரிப்பு பணி 29/01/2024 முதல் 02/02/2024 வரை 5 நாட்கள் நடைபெறும். இரவு 11 மணி முதல் காலை 3.00 மணி வரை ரயில் சேவை கொருக்குப்பேட்டை சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இயங்காது.

சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும்

வண்டி எண் . 42426 SPE – MASS ,  சூலூர்பேட்டையில் இருந்து இரவு 9.40-க்கு புறபடும் ரயில் மற்றும் வண்டி எண். 43025 MASS – AVD , சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.45- க்கு புறபடும் ரயில் 29/01/2024 ,30/01/2024,31/01/2024, 01/02/2024, 02/02/2024 ஆகிய 5 நாட்கள் சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பயணிகளுக்கு அறிவுரித்தி உள்ளது.

MUST READ