Homeசெய்திகள்சென்னைசென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்கக் கட்டணம் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நாளை முதல் அனைத்து வகையான வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினசரி வேலை நிமித்தமாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானகரம்

we-r-hiring

புதிய கட்டண உயர்வின் விவரங்கள் பின்வருமாறு:

  • கார், ஜீப், வேன்: ஒரு முறை சென்று வர ரூ.80-ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (ஒன்றுக்கு மேற்பட்ட முறை செல்பவர்களுக்கான கட்டணம் மற்றும் மாத பாஸ் கட்டணம் ரூ.50 முதல் ரூ.360 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது).

  • இலகுரக வணிக வாகனங்கள்: ஒருமுறை செல்ல ரூ.80-லிருந்து ரூ.90 ஆகவும், சென்று வர ரூ.130-லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • பேருந்து மற்றும் ட்ரக் (பேருந்துகள்/லாரிகள்): ஒருமுறை செல்ல ரூ.185-லிருந்து ரூ.190 ஆகவும், சென்று வர ரூ.275-லிருந்து ரூ.285 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • கனரக வாகனங்கள் (டாராஸ் போன்றவை): ஒருமுறை செல்ல ரூ.200-லிருந்து ரூ.205 ஆகவும், சென்று வர ரூ.300-லிருந்து ரூ.310 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • 4 முதல் 6 ஆக்ஸில் கனரக வாகனங்கள்: ஒருமுறை செல்ல ரூ.285-லிருந்து ரூ.295 ஆகவும், சென்று வர ரூ.430-லிருந்து ரூ.445 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

  • அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் (Oversize vehicles): ஒருமுறை செல்ல ரூ.350-லிருந்து ரூ.360 ஆகவும், சென்று வர ரூ.525-லிருந்து ரூ.540 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கட்டணத் திருத்தத்தின் அடிப்படையிலேயே இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திடீர் கட்டண உயர்வு லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கூடுதல் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்: லாபான் பவுல்ஸ் மற்றும் குத்துச்சண்டையில் இந்தியாவின் சிறப்பான முன்னேற்றம்!

MUST READ