- Advertisement -
பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக உருவெடுத்த அவர், 2014-ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகம் ஆகினார். பாலிவுட் நடிகையாக இருந்தாலும் அவருக்கு தமிழில் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். வடகறி படத்திற்கு பிறகு மம்மூட்டி நடித்த மதுரராஜா மற்றும் ஓ மை கோஸ்ட், தீ இவன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இது தவிர இந்தி மற்றும் தமிழ் மொழியிலும் அவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களின் மனதை வென்ற நடிகை சன்னி லியோன், அண்மையில் தொழில் அதிபராகவும் அவதாரம் எடுத்தார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா நகரில் அவர் புதிய உணவகம் ஒன்றை திறந்தார். எனவே, நடிப்பு, தொழில் மற்றும் குடும்பம் என மாறி மாறி தன் கவனத்தை செலுத்தி வருகிறார்.




