Homeசெய்திகள்தமிழ்நாடுமாணவியின் மரணம் குறித்து 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல்

மாணவியின் மரணம் குறித்து 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல்

-

- Advertisement -

கள்ளக்குறிச்சியில், கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி இறந்திருந்தார்.

இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மேலும், மாணவியின் மரணம் குறித்து பல கட்ட விசாரணைகள் நடந்துவந்தது.

Home

we-r-hiring

இந்நிலையில், தற்போது வழக்கின் விசாரணை முடிவடைந்துவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யபடும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் செல்ஃபோனை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தடயவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம் என்றும் சி.பி.சி.ஐ.டி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரண வழக்கில் விசாரணையை முறையாக நடத்த கோரி தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

MUST READ