மணிரத்னம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து வரும் படம் தான் தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன் இணைந்து திரிஷா, கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படத்திலிருந்து வெளியேறினார்கள் என பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதேசமயம் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஜெயம் ரவிக்கு பதிலாக யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு காலகட்டங்களில் நடைபெறும் கதையாக தயாராகி வருகிறதாம். அதன்படி ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் கமல்ஹாசன் மூன்று வேடங்களில் நடிக்கிறாராம்.
அதாவது கமல்ஹாசன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கலாம் அல்லது மூன்று கெட்டப்பில் நடிக்கலாம் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தக் லைஃப் படம் சம்பந்தமாக வெளியாகும் அடுத்தடுத்த தகவல்களினால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே கமல் அரசியலில் பிசியாக இருப்பதன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -