spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!

ஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!

-

- Advertisement -

 

ஒருநாள் பிரியாணி விற்பனைக்கு தடை விதித்து அதிகாரிகள் உத்தரவு!

we-r-hiring

நாமக்கல்லில் உள்ள ஒரு அசைவ பிரியாணி உணவகத்தில் தரமற்ற சிக்கன் பிரியாணி விற்பனை செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து, பிரியாணி விற்பனைக்கு ஒருநாள் தடை விதித்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வெற்றி கணக்கை தொடங்குமா மும்பை – டெல்லி அணியுடன் இன்று மோதல்!

சேலம் சாலையில் உள்ள பிரியாணி கடையில் ஆன்லைன் மூலம் பெண் ஒருவர் பிரியாணி ஆர்டர் செய்திருந்த நிலையில், பிரியாணியில் இருந்த இறைச்சி முழுமையாக வேகாமல் தரமற்று இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, சம்மந்த பெண் அளித்த புகாரின் பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் அருண் தலைமையிலான அதிகாரிகள், பிரியாணி கடையில் இருந்த சிக்கன் பிரியாணி, இறைச்சி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!

அதில் சில தரமற்ற உணவுப் பொருட்கள் இருந்ததைக் கண்டு இன்று (ஏப்ரல் 07) ஒருநாள் விற்பனைக்கு தடை விதித்து கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டதுடன், உணவகத்தின் உரிமையாளரை எச்சரிக்கை செய்தனர். மேலும், உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவு மாதிரிகளின் ஆய்வு முடிவுக்கு பிறகு சம்மந்தப்பட்ட உணவகத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

MUST READ