Homeசெய்திகள்தமிழ்நாடு"யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!" - காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

“யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!” – காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!

-

- Advertisement -

விவசாயிகளுக்குக் குறைந்த நிதி ஒதுக்கீடு | காவிரி, பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட பாமக வலியுறுத்தல்."யார்கிட்டயும் கையேந்த தேவையில்லை!" - காவிரி, பாலாற்றுக்கு சௌமியா அன்புமணி கொடுத்த மாஸ் பிளான்!தமிழக பட்ஜெட்டில் கூட்டுறவுப் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், விவசாயத் துறைக்கான நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகளைப் பட்டியலிட்டுச் சட்டப்பேரவையில் பேசினார்.

பயிர்க்கடன் தள்ளுபடி பெறாதது ஏமாற்றம்
தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி, “தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்த கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு இல்லாதது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. சுமார் 5 கோடி விவசாய மக்களைக் கொண்ட நமது மாநிலத்தில், வேளாண் துறைக்கு ரூ. 14,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகக் குறைந்த தொகையாகும். நாட்டிற்கே சோறு போடும் விவசாயிகளுக்கு ஏன் இவ்வளவு குறைவான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

we-r-hiring

தடுப்பணைகள் மூலம் 100 டி.எம்.சி நீரைச் சேமிக்கலாம்
நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு அரசு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், மாநிலத்தின் நதிநீர் மேலாண்மை குறித்துச் சில முக்கிய ஆலோசனைகளை முன்வைத்தார்.

  • தடுப்பணைகள் அமைத்தல்: பாலாறு, காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் 35 முக்கிய ஆறுகளில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அண்டை மாநிலங்களிடம் கையேந்த வேண்டாம்: காவிரியில் தடுப்பணைகளைக் கட்டுவதன் மூலம் கடலில் வீணாகக் கலக்கும் தண்ணீரைச் சேகரிக்க முடியும். குறைந்தது 100 டி.எம்.சி நீரையாப்பது சேமித்தால், தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலை வராது.

சிறிய விவசாயிகளுக்குச் சென்றடையாத மானியங்கள்
விவசாயிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “1 ஏக்கர், 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அரசு அறிவிக்கும் மானியங்கள் மற்றும் திட்டங்கள் பற்றிய தகவல்கள் போதிய அளவில் சென்று சேருவதில்லை” என்று கவலை தெரிவித்தார்.

வரவேற்பும் கோரிக்கையும்
அதேவேளையில், பட்ஜெட்டில் மகளிர் மற்றும் விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களையும், இயற்கை விஞ்ஞானி பெயரிலான விருது அறிவிப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்த சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அரசு கூடுதல் நிதியை வழங்கி, நீர் மேலாண்மை திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழித்து வாக்குச்சீட்டு முறையை மீட்டெடுப்போம்: மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தலைமையில் புதிய மக்கள் இயக்கம் தொடக்கம்!

MUST READ