- Advertisement -
ஃபகத் ஃபாசில் நடிப்பில் திரையரங்குகளில் சக்கைப்போடு போடும் ஆவேஷம் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியான ஆவேசம் திரைப்படம் சுமார் 100 கோடி வசூலை கடந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த ஆண்டு மலையாளம் சினிமாவில் வெளியான அனைத்து திரைப்படங்களும் அதிரி புதிரி ஹிட் அடித்தன. நடப்பாண்டில் வெளியான பிரேமலு, மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய திரைப்படங்கள் மலையாள ரசிகர்கள் மத்தியில் மட்டுமன்றி தமிழிலும் பெரும் ஹிட் அடித்தன.


அந்த வகையில் தற்போது ஃபகத் ஃபாசில் நடிப்பில் உருவான இத்திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறு வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் ஃபகத்துடன் மன்சூர் அலிகான், ஆஷிஷ் வித்யாத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை இளம் வயதினர் அதிகம் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படம் வெளியான 13 நாட்களை கடந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.



