Homeசெய்திகள்சினிமாசாலையோர கடையில் விக்கியுடன் நயன்தாரா... வீடியோ வைரல்...

சாலையோர கடையில் விக்கியுடன் நயன்தாரா… வீடியோ வைரல்…

-

- Advertisement -
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு ஜவான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். முதல் படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார்.

ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நயன்தாராவுக்கு, பாலிவுட்டிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தற்போது டெஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக மண்ணாங்கட்டி படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் கண்ணப்பா படத்தில் நயன்தாரா நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்படத்திலிருந்தும் நயன்தாரா அண்மையில் விலகினார். இதையடுத்து, நடிப்பு மட்டுமன்றி தொழில்களிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

https://www.instagram.com/p/C5dOLkiRvAw/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது கணவரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனுடன் இணைந்து, சாலையோரக் கடையில் உணவு சாப்பிட்ட காணொலி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் நண்பர்களும் உடன் இருந்தனர். அங்கிருந்த ரசிகர் ஒருவர் இந்த வீடியோவை எடுத்துள்ளார்.

MUST READ