spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகுருவாயூர் அம்பலநடையில் படத்தின் டிரைலர் அப்டேட் இதோ...

குருவாயூர் அம்பலநடையில் படத்தின் டிரைலர் அப்டேட் இதோ…

-

- Advertisement -
அண்மை காலமாக தென்னிந்திய மொழிகளில் அவரவர் திரையுலகில் ஹீரோக்களாக நடித்து வரும் முன்னணி நடிகர்கள், மற்ற மொழிகளில் வில்லனாக நடிக்க மிகப்பெரிய சம்பளம் கொடுத்து அழைக்கும்போது மகிழ்ச்சியகா ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்கள். பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் நடிகர் பிருத்விராஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரது வில்லன் நடிப்பிற்கு வரவேற்பும் கிடைத்தது.

தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் குருவாயூர் அம்பலநடையில் என்ற சின்ன பட்ஜெட் படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகர் பிருத்விராஜ். விபின் தாஸ் இயக்கம் இந்த படத்தில் பசில் ஜோசப், யோகி பாபு நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், ரேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். அங்கித் மேனன் இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 10-ம் தேதி துபாயில் நடைபெறும் திரைப்பட நிகழ்ச்சியில் டிரைலர் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ