விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை டெம்போ பணம் பெற்றீர்கள்? – மோடிக்கு ராகுல் கேள்வி
நாட்டின் 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெம்போகளில் பிரதமர் மோடி பணம் பெற்றார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி அம்பானியிடம் லாரி லாரி ஆக பணப்பெற்று கொண்டு அவர்களைப் பற்றி பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டதாக மோடி குற்றம் சாட்டிய நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்திற்கு சென்ற ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
டெம்போவில் பணம் அனுப்புபவரின் விமான நிலையத்திலிருந்து வீடியோ வெளியிடுவதாக குறிப்பிட்டிருக்கும் ராகுல் எத்தனை டெம்போக்களில் பணத்தைப் பெற்றுக் கொண்டு நாட்டின் ஏழு விமான நிலையங்களை பிரதமர் மோடி தாரை வார்த்தார் என்பது குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
आज मैं लखनऊ एयरपोर्ट पर था।
यहां से लेकर मुंबई और गुवाहाटी से लेकर अहमदाबाद तक तमाम एयरपोर्ट प्रधानमंत्री ने अपने ‘टेम्पो वाले मित्र’ को सौंप दिए हैं।
देश की संपत्ति कितने टेम्पो के बदले बेची गयी, क्या नरेंद्र मोदी जनता को बताएंगे? pic.twitter.com/TRBRqOnmYx
— Rahul Gandhi (@RahulGandhi) May 13, 2024
ஏழு விமான நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்திற்கான விளம்பரத்தையும் தனது வீடியோவில் விமர்சித்துள்ளார்.
https://www.apcnewstamil.com/news/politics/modi-canvasses-votes-with-khichdi-and-chapati-rolls/84305
பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வரும் ராகுல் காந்தி பயணத்தின் போது வெளியிடப்படும் விமர்சனம் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு பெறுவது குறிப்பிடத்தக்கது.