Homeசெய்திகள்சினிமா'கார்த்தி 27' படத்தின் முக்கிய அறிவிப்பு!

‘கார்த்தி 27’ படத்தின் முக்கிய அறிவிப்பு!

-

- Advertisement -

கார்த்தி 27 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வருகிறார். அதன்படி கடைசியாக நடிகர் கார்த்தி தனது 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை தரவில்லை. அதைத்தொடர்ந்து நடிகர் கார்த்தி நலன்குமாரசாமி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்துள்ளார். 'கார்த்தி 27' படத்தின் முக்கிய அறிவிப்பு!

விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் இயக்குனர் தான் பிரேம்குமார். இவர் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் கார்த்தி 27 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இணைந்து தங்களின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ஸ்ரீதிவ்யா, ஸ்வாதி கொண்டே உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். குடும்பப் பொழுதுபோக்கு படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணம் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டது. 'கார்த்தி 27' படத்தின் முக்கிய அறிவிப்பு!மேலும் இந்த படத்திற்கு மெய்யழகன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணி மற்றும் 7 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் கார்த்தி 27 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ