Homeசெய்திகள்சினிமாகமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்... இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா.... கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்… இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா….
- Advertisement -

‘பத்து தல’ படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு தனது 48வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் எனும் திரைப்படத்தை இயக்கியவர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு இதுவரை தலைப்பு வைக்கப்படவில்லை. இதில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

இப்படம் ஹிஸ்டாரிக்கல் பீரியாடிக் படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. இதனிடையே, கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது அவர் பங்கேற்று வருகிறார். மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார்.

தக் லைஃப் படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. தக் லைஃப் படத்திற்கு பிறகு தேசிங்கு பெரியசாமி படத்தில் சிம்பு நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இசை அமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பாக தமன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக கூறப்பட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.