- Advertisement -
கடந்த 2011- ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குறும்பு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணு வர்தன். அதைத் தொடர்ந்து தமிழில் அறிந்தும் அறியாமலும், பட்டியல் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி இருக்கிறார். இதையடுத்து, அஜித் நடிப்பில் வெளியான பில்லா என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு இயக்குநர் விஷ்ணு வர்தனின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதையடுத்து தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிப்பில் பஞ்சா படத்தை இயக்கினார். இதையடுத்து தமிழில் அஜித்தை வைத்து ஆரம்பம் திரைப்படத்தை இயக்கினார். தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமன்றி இவர் இந்தியிலும் திரைப்படங்கள் இயக்கி இரு்ககிறார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் மீண்டும் தமிழில் திரைப்படம் இயக்கி வருகிறார். இதில், மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார்.




