spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசாலையோர கடையில் வெளுத்துக்கட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்

சாலையோர கடையில் வெளுத்துக்கட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ்

-

- Advertisement -
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் சைரன். ஜெயம்ரவியுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருந்தார். நடப்பு ஆண்டில் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் 5 படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் ரகுதாத்தா. ஹம்போலே நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. இதையடுத்து ரிவால்வர் ரீதா படத்தில் நடித்துள்ளார். சந்துரு இந்த படத்தை இயக்கி இருக்கிறார். அதேபோல, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் மற்றொரு திரைப்படம் கன்னிவெடி. கணேஷ் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். மேலும், இந்தியில் பேபி ஜான் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

நடிப்பு மட்டுமன்றி உடற்பயிற்சி மற்றும் யோகாவிலும் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சாலையோர கடையில் நின்று உணவு சாப்பிட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ