
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,328க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,685க்கு விற்பனை செய்யப்பட்டது. ஞாயிற்று கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலை எவ்வித மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.53,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.6,685க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை எவ்வித மாற்றமின்றி ரூ.94.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


