spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதேனி அருகே அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் பலி!

தேனி அருகே அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர் பலி!

-

- Advertisement -

தேனி மாவட்டம் கம்பத்தில் அரசு மருத்துமனை கட்டிடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

we-r-hiring

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மூன்று மாடி கொண்ட மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளானது கடந்த 2 ஆண்டுகளாக புதிய கட்டிடம் அமைக்கும் பணியில் வெளி மாவட்ட பணியாளர்கள் ஏராளமானோர் நாள்தோறும் பணிபுரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் கட்டுமான நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், மதுரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் ஆகியோர் புதிய கட்டிடத்தில் உள்ள போர்டிகோ மற்றும் எலிவேஷன் பகுதியில் கட்டிடப் பணிகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரம் மேற்பகுதியில் இருந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மூவர் சுவருக்குள் சிக்கிக் கொண்டு அலறினர்.

இந்த சம்பவம் குறித்து அருகில் பணிபுரிந்த பணியாளர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரமாக போராடி உயிரிழந்த நம்பிராஜனை பிரேதமாக மீட்டனர். மேலும் இதில் உடன் பணிபுரிந்த சக பணியாளர்களான முனீஸ்வரன் மற்றும் ரத்தினவேல் இருவரும் படுகாயம் அடைந்தனர் தொடர்ந்து அவர்களை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கம்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முக்கிய காரணம் என்னவென்றால் புதிதாக கட்டி வரும் இந்த மருத்துவமனை கட்டிடத்தில் உரிய தளவாடங்களை சரிவர பயன்படுத்தி கட்டிடம் கட்டாததால் புதிய கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக உடன் பணிபுரியும் சக பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வருத்தத்துடன் கவலை தெரிவித்துள்ளனர்.

MUST READ