spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 3' பட ட்ரெய்லர் குறித்து பேசிய படக்குழு!

‘இந்தியன் 3’ பட ட்ரெய்லர் குறித்து பேசிய படக்குழு!

-

- Advertisement -

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996 இல் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்படும் சங்கர் இயக்கியிருந்தார். 'இந்தியன் 3' பட ட்ரெய்லர் குறித்து பேசிய படக்குழு!ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் சேனாபதி என்ற கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. இந்நிலையில் தான் இயக்குனர் சங்கர் இந்தியன் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டார். அதன்படி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பாகவே இந்தியன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. 'இந்தியன் 3' பட ட்ரெய்லர் குறித்து பேசிய படக்குழு!ஆனால் கொரோனா போன்ற ஒரு சில காரணங்களால் படமானது நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி வருகின்ற ஜூலை 12ஆம் தேதி (நாளை) இந்தியன் 2 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் இந்தியன் 2 திரைப்படம் படமாக்கப்படும்போது அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டதால் அது இந்தியன் 3 ஆக உருவாகிவிட்டது. மேலும் இந்தியன் திரைப்படத்தில் சேனாபதியின் தந்தையுடைய காட்சிகள் இடம்பெறும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் பட குழு பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது இந்தியன் 3 படம் குறித்து பேசி உள்ளது. அதாவது இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கு லீட் கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது இந்தியன் 2 படத்தின் முடிவில் இந்தியன் 3 பட டிரெய்லர் இடம் பெற்றிருக்கும் என்று பட குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியன் 3 திரைப்படமானது இன்னும் ஆறு மாதங்கள் கழித்து திரையிடப்படும் என்றும் படக்குழு அப்டேட் கொடுத்துள்ளது. ஆகையால் இந்தியன் 3 திரைப்படமானது 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ