விக்ரம் நடிப்பில் உருவாக்கியுள்ள தங்கலான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
நடிகர் விக்ரம் தனது ஒவ்வொரு படத்திற்காகவும் தன்னை மெழுகாய் உருக்கி தன்னை மாறுபட்ட தோற்றத்தில் காண்பிக்க மிகவும் கடினமாக உழைப்பார். அது மட்டும் இல்லாமல் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் ஆச்சரியப்படுத்தி விடுவார். அந்த வகையில் நடிகர் விக்ரம் இதுவரை கிட்டத்தட்ட 30 பரிமாணங்களில் நடித்திருக்கிறார். சினிமாவிற்காக முழு அர்ப்பணிப்புடன் பணிபுரியும் உன்னத கலைஞர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர். தற்போது விக்ரம் நடிப்பில் தங்கலான் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பா ரஞ்சித் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.
மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜாவும் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் பா ரஞ்சித்தும் தங்கலான் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க கிஷோர் குமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இதில் விக்ரம் தவிர மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் படும் அவதியை மையமாக வைத்து இந்த தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியான நிலையில் தற்போது இதன் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
இந்த ட்ரெய்லரில் ஒவ்வொரு நடிகர்களும் வேறொரு பரிமாணத்தில் காட்டப்பட்டுள்ளனர். மேலும் இந்த ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் ஒவ்வொன்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது. அத்துடன் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.