சூர்யா நடிப்பில் தற்போது சூர்யா 44 திரைப்படம் உருவாகி வருகிறது. அதற்கு முன்னதாக நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகும் இந்த படமானது பத்துக்கும் அதிகமான மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து வருகின்ற ஜூலை 23 சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் டிரைலர் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில் கங்குவா படத்தின் ரிலீஸை முன்னதாகவே அறிவித்ததற்கான காரணத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் நடந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
• So the release date for #Kanguva was announced primarily due to the strong performance of #Kalki2898AD in the Hindi market. Otherwise, Kanguva would have been released after Pushpa 2 😳🔥 pic.twitter.com/oymE1GCi97
— ᴊɪꜱʜɴᴜ 💫 𝁁 (@jishnu___offl) July 10, 2024
அவர் பேசியதாவது, “கல்கி 2898AD படத்தின் ரிலீஸின் போது நான் மூன்று நாட்கள் தூங்கவில்லை. ஏனென்றால் அது இந்தியிலும் வெளியாவதால் ஒவ்வொரு தென்னிந்திய திரைப்படத்தையும் பாதிக்கும். இதன் காரணமாகவே கல்கி வெளியான அன்றே கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தேன். அது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் புஷ்பா 2 படத்தின் ரிலீஸுக்கு பின்னர் தான் கங்குவா ரிலீஸ் ஆகியிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.