Homeசெய்திகள்சினிமா'இந்தியன் 2' முதல் நாளில் எத்தனை கோடி அள்ளியது?

‘இந்தியன் 2’ முதல் நாளில் எத்தனை கோடி அள்ளியது?

-

- Advertisement -

கமல்ஹாசன் நடிப்பில் நேற்று (ஜூலை 12 ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் இந்தியன் 2. இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். 'இந்தியன் 2' முதல் நாளில் எத்தனை கோடி அள்ளியது?லைக்கா நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசை அமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தில் கமல்ஹாசன் தவிர சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் போன்றோர் நடித்திருந்தனர். இந்தியன் முதல் பாகத்தில் சேனாபதியின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதன் காரணமாக இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. 'இந்தியன் 2' முதல் நாளில் எத்தனை கோடி அள்ளியது?ஆனால் படமானது நேற்று வெளியானதில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேக்கிங், திரைக்கதை எதுவுமே வலுவாக அமைக்கப்படவில்லை எனவும் இயக்குனர் சங்கர் பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி படம் எடுத்திருக்கிறார் எனவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதேசமயம் இந்தியன் முதல் பாகத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை கூஸ்பம்ஸ் கொடுத்தது போல அனிருத் இசை படத்திற்கு பலமளிக்கவில்லை. இவ்வாறு எதிர்பார்ப்புடன் சென்ற ரசிகர்களுக்கு இந்தியன் 2 திரைப்படம் ஏமாற்றத்தை தந்தாலும் அதன் இறுதியில் இடம் பெற்றிருந்த இந்தியன் 3 ட்ரெய்லர் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதாவது இந்தியன் 3யானது சேனாபதியின் தந்தை வீரசேகரனை பற்றிய கதை.'இந்தியன் 2' முதல் நாளில் எத்தனை கோடி அள்ளியது?இந்தியன் 2வை விட இந்த இந்தியன் 3 தான் தற்போது பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 26 கோடி வரை வசூல் செய்துள்ளது என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ