ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை. நள்ளிரவில் மர்ம நபர்கள் கைவரிசை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியான ராமலிங்கம் (75) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 33 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.